இன்று நடைபெறுகிறது ஐநா பாதுகாப்புச் சபையின் அவசர கூட்டம் ரஷ்யாவின் தீர்மானம் நிராகரிக்கப்படுமா?

0
167

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு அண்டை நாடான ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனாலும் அமெரிக்கா உக்ரைனை நேச நாடுகள் பட்டியலில் இணைப்பதற்கு முனைப்பு காட்டி வருகிறது. அதோடு யார் வேண்டுமானாலும் நேச நாட்டு பட்டியலில் வந்து இணையலாம் கதவுகள் திறந்தே இருக்கிறது என்றும் அமெரிக்கா தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து நேச நாட்டுப் படைகள் உடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 24ஆம் தேதி ரஷ்யா திடீரென்று உக்ரைன் மீது போர் தொடுத்தது.20 நாட்களை கடந்து நடைபெற்றுவரும் இந்த போரில் முதலில் ராணுவ நிலைகளை மட்டுமே நாங்கள் கூறி வைப்போம் என்று தெரிவித்து வந்த ரஷ்ய அந்தச் சமயம் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இது உலக அளவில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டு வந்திருக்கின்ற மனிதாபிமான வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்திருக்கிறது, அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளையதினம் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், இன்று அதுதொடர்பாக விவாதம் நடைபெறவிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று மறுபடியும் அவசரமாக கூடுகிறது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட 6 மேற்கத்திய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. சபையின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் உக்ரைன் விவகாரத்தில் வெளிப்படையான விவாதம் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.

இன்றையதினம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரிட்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ரஷ்யா கடுமையான போர் குற்றங்களை நிகழ்த்தி வருகிறது.

பொது மக்களை குறி வைக்கும் விதமாக தாக்குதல் நடத்தி வருகின்றது. ரஷ்யாவின் சட்டவிரோத போர் எல்லோருக்கும் ஆபத்தானது என்று கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தீர்மானத்தில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாக பல நாடுகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு புறம் உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதாக வெளியாகி வரும் தகவல் அனைத்தும் போலியானவை என்று ரஷ்யாவின் தரப்பின் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இன்று நடைபெறும் கூட்டத்தில் ரஷ்யாவின் தீர்மானம் இது முழுமையான விவாதம் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleஇன்று முழு அடைப்பு போராட்டம்! சட்டத்தின் தீர்ப்பை எதிர்க்கும் மக்கள்!
Next article‘பீஸ்ட்’ படத்தில் விஜய் பாடியுள்ள பாடல் இந்த தேதியில் வெளியாகிறது!