பிரம்மபுத்திரா நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்: சீனாவுக்கு அடுத்தடுத்த செக்?

0
137

சீனாவை பொருத்த மட்டில் எந்த நாட்டில் தான் எந்த மாநிலத்தில் தான் எல்லை பிரச்சனை செய்யாமல் இருக்கின்றனர் என்று தெரியவில்லை.
லடாக் எல்லைப் பிரச்சனை போன்றே அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சில கலமாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அது மட்டுமின்றி அம்மாநில எல்லையில் அவ்வப்போது சீன ராணுவத்தினர் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அத்துமீறல்கள் சீன படையினர் நடத்தும்போது, எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினரே சீன ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆனால் சீனப் படையினர் அத்துமீறும் போது நம் வீரர்கள் அப்பகுதிக்குச் செல்ல சில நாட்கள் ஆகி விடுகிறது. அதாவது அண்டை மாநிலங்களில் இருந்து நமது ராணுவ வீரர்கள் அங்கு செல்வதற்கு 2 அல்லது 3 நாட்கள் கூட ஆகிவிடுகின்றன. இந்த தொலைவு சீனாவுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, இந்த தொலைவைக் குறைக்கும் வகையில், அசாமில் பாயும் பிரம்மபுத்திரா நதிக்கு அடியில் 14.8km நீளத்தில் சுரங்கச் சாலை அமைக்கும் திட்டத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அசாமின் கோஹ்பூர் பகுதி முதல் அருணாச்சலப் பிரதேச எல்லை அருகே உள்ள நுமலிஹர் பகுதி வரை சுரங்கச் சாலை அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதை முழுக்க முழுக்க பிரம்மபுத்திரா நதிக்கு (நீருக்கடியில்) அடியில் அமைக்கப்படவுள்ளது.

இந்த கட்டுமான ஒப்புதலை அமெரிக்காவின் லூயிஸ் பெர்ஹர் நிறுவனம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், இணைத்து இந்த சுரங்கச் சாலையை கட்டமைப்பு செய்ய உள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சுரங்க பாதையின் மூலம் சீன இராணுவத்தினர் அத்து மீறும் போது கால தாமதம் இல்லாமல் நம் இராணுவத்தினர் தடுத்து நிறுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஅபராத கட்டணத்தை உயர்த்தும் வங்கிகள்! மின்மம் டெப்பாசிட் இல்லையென்றால் இதுதான் முடிவு!
Next articleகாரில் சிக்கிய 5 கோடி பணம் யாருடையது.? ஆந்திர அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!!