DMK CONGRESS: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளது. அதற்காக கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. திராவிட கட்சியான அதிமுக ஜெயலலிதா இறந்த காலத்திலிருந்தே தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. அதனால் இந்த தேர்தலை கண்ணும் கருத்துமாக கவனித்து வெற்றி பெற போராடி வருகிறது. ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை இந்த சமயம் இரண்டு பக்கத்திலிருந்தும் எதிரிகள் தாக்குவதால் அதனை தற்காத்துக் கொள்ள இந்த முறையும் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டுமென்ற நோக்கில் உழைத்து வருகிறது.
ஆனால் அதன் கூட்டணி கட்சிகளோ ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என திமுக தலைமையை வலியுறுத்தி வருகிறது. அதிமுக-தவெகவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவிக்கும் திமுகவிற்கு இது மேலும் பிரச்சனையை கூடியுள்ளது. திமுக கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் மற்ற கட்சிகளை விட ஒரு படி மேலே சென்று, உட்கட்சி விவகாரத்தை பொது வெளியில் கூறி வருகிறது. இதற்கு திமுக ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தவெக கூட்டணிக்கு சென்று விடுவோம் என்று கூறியதாகவும் தகவல் வெளியானது.
காங்கிரஸின் கோரிக்கை குறித்து எந்த பதிலும் கூறாமலிருந்த திமுக தலைமை பீகார் தேர்தல் வரை காத்திருந்தது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததால், இதனை காரணம் காட்டி காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை தர வேண்டாமென திமுக முடிவெடுத்து விட்டதாக திமுக வட்டாரங்கள் கூறி வந்தன. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளராக இருந்து திமுக பக்கம் தாவிய மருது அழகுராஜ் ஒரு கருத்தை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் பெரியளவு செல்வாக்கு இல்லை. மேலும் பீகார் தேர்தலில் தோல்வியுற்றதை மையப்படுத்தி பேசிய மருது அழகுராஜ், நாங்கள் சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் வளர்ச்சி கண்டிருக்கிறோம் என்பதற்கான ஆதாரத்தை காட்டி விட்டு அதிக தொகுதிகளை கேட்டால் நியாயம்.
அப்படி இல்லாமல் எதிரே ஒரு கூடாரம் வந்துவிட்டது, அதிக தொகுதிகளை தரவில்லையென்றால் அங்கே போய் விடுவோம் என்று சொல்வது சந்தர்ப்பவாதம். அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி அதனை நிச்சயம் செய்யாது என்று நம்புகிறேன் என கூறினார். இவரின் இந்த கருத்து காங்கிரஸுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை, அதோடு பீகார் தேர்தலிலும் தோல்வி அடைந்ததால், அதன் மதிப்பு திமுக கூட்டணியில் குறைந்து விட்டது என்பதை நிரூபித்திருக்கிறது.

