வேலையில்லா இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! இன்றே கடைசி நாள்!!

Photo of author

By Jeevitha

TN Government: நம் தமிழக அரசு ரேஷன் கடைகளில் உள்ள 3ஆயிரத்து 308-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்றுடன் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்று அறிவித்துள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நிலையில் அந்தந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி அதில் வேலையில்லா இளைஞர்களுக்கு பல வகையான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. அந்த முறையில் பல இளைஞர்கள் பயனடைந்து உள்ளார்கள்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு அறிவித்துள்ளது. அந்த விண்ணப்பங்கள் முடிவடைய இன்றே கடைசி தேதி. மேலும் 3ஆயிரத்து 308-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் தகுதி உள்ளவர்கள் சரியான இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவித்துள்ளனர்.

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை என்பது 10மற்றும் 12ஆம் வகுப்பு அடிப்படையில் தேர்வு செய்து நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படும். மேலும் இந்த வேலைவாய்ப்பில் இரண்டு முறைகள் உள்ளது. அது விற்பனையாளர் மற்றும் கட்டுனர். இவர்களின் பதவிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

அதாவது விற்பனையாளர் பணிக்கு, மாதம் ரூ.6,250 தொடக்கத்தில் வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு மேல் ரூ.8,600 முதல் 29,000 வரை வழங்கபடும். மேலும் கட்டுநர் பணிக்கு ரூ.5,500 தொடக்கத்தில் வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு மேல் ரூ.7,800 முதல் ரூ.26,000 வரை வழங்கபடும்.