கருணாநிதியின் மறைவிற்கு முன்னரே கட்சியில் இருந்து முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்பட்டவர் மு.க. அழகிரி .கட்சியில் இணைய பல வகைகளிலும் முயற்சி செய்து வந்தார். ஆனாலும் இயலவில்லை இந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களாக அமைதியாக இருந்த அழகிரி தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மீண்டும் அவருடைய வேலையை ஆரம்பித்து இருக்கின்றார். தன்னுடைய நடவடிக்கைகளை வேகப்படுத்தும் விதமாக தற்போது சென்னையில் முகாமிட்டு இருக்கின்ற அழகிரி, பல தரப்பினரிடமும் தீவிர ஆலோசனை செய்து வருகின்றார்.
இதுதொடர்பாக அழகிரிக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் தெரிவிக்கையில், அண்ணன் அரசியல் ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பல வாய்ப்புகளையும், பரிசீலனை செய்து வருகின்றார். தந்தையுடைய பெயரில் த.க.தி.மு.க என்ற புதிய கட்சி ஆரம்பிக்கும் திட்டமும் இருக்கின்றது. ஆனால் தனிக்கட்சி ஆரம்பிப்பதால் ஏற்படும் பொருட்செலவும், மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் உடல்நலக் குறைவு ஏற்படும் என்பது அவரை யோசிக்க வைத்திருக்கிறது. ஆகவே முழுமையாக கட்சியாக இல்லாமல் பாசறை அல்லது பேரவை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்தால், என்ன என்ற சிந்தனையும் அவருக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றது.
ரஜினி கட்சி தொடங்கும் பட்சத்தில், தன்னுடைய அமைப்பை அவருக்கு ஆதரவாக செயல்பட வைக்கலாம் ரஜினி அணியிலே ஆதரவாளர்களை நிறுத்துவது என்று பல யோசனைகள் அழகிரியிடம் இருக்கின்றது. என்று தெரிவிக்கப்படுகின்றது. ஒரு வேலையை சரியாக வராத சமயத்தில் திமுகவிற்கு எதிரான வலுவான கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். என்று தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து அழகிரிக்கு நெருக்கமான மதுரை பிரமுகர் ஒருவர் தெரிவிக்கையில் , அவரிடம் பல வாய்ப்புகள் இருந்து வருகின்றன. எந்த வாய்ப்பை பயன்படுத்தினாலும் ஸ்டாலின் தரப்பை வீழ்த்த முடியும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்து வருகின்றது. திமுகவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின் பெரிய பூகம்பமே கிளம்பும் சீட் கிடைக்காத கோபத்தில் பலரும் அந்த கட்சியில் இருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அவர்களைப் போன்றவர்கள் எங்கள் பக்கம் தான் வருவார்கள். இவை தவிர தேர்தல் வேலைகளில், அழகிரியின் நிபுணத்துவம் அனைவருக்கும் தெரியும் இவற்றையெல்லாம் ஒன்று சேர்க்கும் போது திமுகவின் ஆட்சி கனவு செயலிழந்து போகும் என்று சொல்கிறார்கள்.