முன்னாள் குடியரசு தலைவருடன் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் சந்திப்பு!! சந்திப்பிற்கு காரணம் இதுவா??

0
193
Union Defense Minister meeting with former President!! Is this the reason for the meeting??
Union Defense Minister meeting with former President!! Is this the reason for the meeting??
முன்னாள் குடியரசு தலைவருடன் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் சந்திப்பு!! சந்திப்பிற்கு காரணம் இதுவா??
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கான காரணத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் அவருடயை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
புனேவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களின் வீட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களின் கணவர் தேவிசிங் ஷெகாவத் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார்.
இதை தனது டுவிட்டர் பக்கத்தில்  அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் “முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களின் வீட்டிற்கு சென்றேன். பிரதீபா பாட்டில் கணவர் தேவிசிங் ஷெகாவத் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தேன். ஏழைக் குடும்பங்களுக்கு தேவிசிங் ஷெகாவத் செய்த நல்ல செயல்களை மறக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களின் கணவர் தேவிசிங் ஷெகாவத் மாரடைப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி காலமானார்.
Previous articleநிலத்தகராறில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் மகன்கள் கைது!! புகார் அளித்த பக்கத்து வீட்டு வாலிபர்!!
Next articleகள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்!! குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!!