முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த மத்திய அமைச்சர்!

Photo of author

By Sakthi

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்காமல் மறுத்துவிட்டார்.

சட்டசபை தேர்தல் வேலைகளுக்காக எல்லா கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையிலே. சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டியில் இருக்கின்ற நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அங்கே புதிய இந்தியா சமாச்சார், மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ,என்ற இரு புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் உரையாடிய அவர் ,காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் தன்னுடைய ஆட்சியை இழந்து வருகின்றது. தமிழ்நாட்டில் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு சிறப்பான வெற்றியை அடையும். நாட்டிலேயே அனேக கட்சிகள் குடும்ப கட்சிகளாக இருக்கின்றன. ஆனால் பாஜகவே ஒரு குடும்பம் தான் என்று தெரிவித்தார்..

தேசிய ஜனநாயக கூட்டணி உடைய முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்கள் இந்த கேள்வியை எழுப்பிய நேரத்தில், அவர் பதிலளிக்காமல் அமைதியாக இருந்து விட்டார். அதோடு பாஜகவிற்கு என்று ஒரு சில வழிமுறைகள் இருக்கின்றன .அந்த வழிமுறைகளை பின் தொடர்ந்து தேசிய தலைமை தான் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும். அதைத்தான் மாநில தலைவர் முருகன் தெரிவித்திருக்கிறார் என்று சொல்லியிருக்கின்றார்.

கூட்டணியில் இருக்கும் போது ,ஒரு கட்சி இன்னொரு கட்சியை சார்ந்த இருப்பது இயல்பான விஷயம் தான். அதிமுக ,மற்றும் பாஜக, கூட்டணிக்கு மட்டும் இல்லை எல்லா கட்சிகளுமே இதே நிலைதான் தொடர்கிறது. என்று தெரிவித்தார் பிரகாஷ் ஜவடேகர்.