நாணய வெளியீட்டு விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்! பிரதமர் மோடியின் சீக்ரெட் மாஸ்டர் பிளான்!

Photo of author

By Sakthi

DMK & BJP: கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நாணய வெளியீட்டு விழாவுக்கு பாஜக கட்சியின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் காரணம் என்றும் ராஜ்நாத் சிங் அவர்களை அனுப்பி வைத்ததே பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும் இதற்கு பின்னால் எதோ ஒரு பெரிய திட்டம் இருக்கின்றது என்றும் தகவல்கள் பரவி வருகின்றது.

தற்பொழுது அடுத்தடுத்து பெரிய திருப்பங்களை இந்திய அரசியலும் நாட்டு மக்களும் சந்தித்து வருகின்றனர். மாநில கட்சிகள் வேண்டாம் அவர்களை அழிப்போம் என்று கூறிய பாஜக கட்சியே தற்பொழுது மாநிலக் கட்சிகளின் கூட்டணியில் தான் ஆட்சியை அமைத்துள்ளது.

அதாவது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சி 240 இடங்களில் வெற்றி பெற்றது. அதே போல காங்கிரஸ் கட்சி தனியாக 97 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மையை தக்கவைக்க முடியாமல் 240 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக கட்சி கூட்டணி அமைக்க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நாடியது.

அந்த வகையில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதாதளம் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவை கேட்டு மத்தியில் வெற்றிகரமாக பாஜக கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக கட்சி மற்ற மாநிலக் கட்சிகளின் ஆதரவையும் எப்படியாவது பெற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றது. திமுக கட்சியின் 21 எம்பிகள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் 47 எம்பிகளின் உதவியை பெற வேண்டும் என்று தற்பொழுது பாஜக கட்சி திட்டமிடத் தொடங்கி இருக்கின்றது.

ஏன் பாஜக கட்சி மற்ற மாநிலங்களின் ஆதரவை பெற வேண்டும் என்று நினைக்கிறது என்றால் அதற்கு பின்னால் பல வகையான காரணங்கள் கூறப்பட்டு வருகின்றது. இருப்பினும் முக்கியமாக இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றது. முதல் காரணமாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் இரண்டாவது காரணமாக மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலும் சொல்லப்படுகின்றது.

அதாவது 1999ம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களின் ஆட்சியை கவிழ்த்ததில் ஜெயலலிதா அவர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கின்றது. அதாவது அப்பொழுது வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த பொழுது வீட்டுக்குச் சென்ற ஜெயலலிதா அவர்கள் அங்கு இருந்த பாஜக எம்பிகளுடன் பேசி உணவு சாப்பிட்டுள்ளனர். பின்னர் திடீரென்று ஹோட்டலுக்குச் சென்று அங்கே அரசியல் பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்று கூறிவிட்டு வாஜ்பாய் அவர்களுக்கு உண்டான ஆதரவை வாபஸ் வாங்கினார்.

இது குறித்து அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் “நான் பிரதமராக இருந்த பொழுது மகிழ்ச்சியாக இருந்ததை விட நான் அதிக மன அழுத்தத்தில் இருந்தது தான் அதிகம். நான் பட்ட மன அழுத்தம் மிக மிக அதிகம். நான் ஆட்சியை விட்டு விலகுகிறேன்” என்று கூறினார். அவரே வந்து ஆட்சியை விட்டு விலகுவதாக அறிவிக்கும் அளவிற்கு ஜெயலலிதா அவர்கள் வாய்பாய் அவர்களையும் அவருடைய ஆட்சியையும் ஆட்டி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் நியாபகத்திற்கு வரவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நினைவு நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.

இந்த நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜக கட்சியை சேர்ந்தவர்களுக்கு மிக அதிகமாக முன்னுரிமையும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு முன் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டதும் பாஜக மற்றும் திமுக நிர்வாகிகள் மிகவும் நெருக்கமாக பேசிக் கொண்டதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நாணயத்தை வெளியிட்டு பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் “திமுக கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் சிறந்த நிர்வாகியாக செயல்பட்டார். அவர் ஒரு மாநிலத் தலைவர் மட்டுமில்ல. அவர் தேசியத் தலைவரும் கூட” என்று புகழ்ந்து பேசினார். இவ்வாறு திமுக மற்றும் பாஜக நெருக்கமாக இருக்க வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றது.

அதாவது கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடு அவர்களை அழைத்தார். மேலும் இதற்காக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் டெல்லியிடம் பேசியும் ஒரு வாரம் ஆகியும் டெல்லியில் இருந்து எந்த பதிலும் கூறவில்லை.

இதையடுத்து தற்பொழுது திமுக கட்சியின் இந்த நாணய வெளியீட்டு விழாவிற்கு டெல்லியே முடிவு செய்து திமுக கட்சியின் கோபத்தை தணிப்பதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்க் அவரை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இதற்கு பின்னாலும் பிரதமர். நரேந்திர மோடி அவர்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

இதன் மூலமாக திமுக கட்சியின் கோபம் குறையலாம் என்றும் நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற திமுக கட்சியும் பாஜக கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்றும் டெல்லி நம்புவதாக கூறப்படுகின்றது.

அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலைஞர் மு.கருணாநிதி அவர்களை பற்றி “கலைஞரின் தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று” என்று புகழ்ந்து பேசினார். தற்பொழுது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் நாணய வெளியீட்டு விழாவில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களை புகழ்ந்து பேசவதற்கும் இதுதான் காரணம் என்று கூறப்படுகின்றது.