Cancellation of university exams:தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று புயலாக வழு பெற்று தமிழகம் நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்து இருந்தது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இலங்கை திருகோணமலை கடற்பகுதிக்கு தெற்கே உள்ள இந்த புயல் 13 கி மீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
சென்னையில் இருந்தது 470 கிமீ தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இந்த புயலுக்கு “ஃபெங்கல்” என்ற பெயரை பரிந்துரை செய்துள்ளது சவுதி அரேபியா. மேலும் நேற்று முதல் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், திருச்சி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் முதலிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த படியாக அழகப்பா பல்கலைக்கழக தேர்வுகளும் மேலும் இன்று நடைபெற இருந்த டிப்ளோமா தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளின் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெற இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.