பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதலமைச்சர்! விரைவில் சட்ட மசோதா தாக்கல்!

0
106

மேற்குவங்க பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜியை வேந்தராக நியமனம் செய்ய முடிவு செய்து மேற்குவங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. மேற்கு வங்கத்தில் பல்கலைகழகங்களில் வேந்தராக ஆளுநர் பதவி வகித்து வருகிறார் இந்த பதவியை அவரிடமிருந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மாற்ற மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.

ஆனால் நாடு முழுவதுமிருக்கின்ற அந்தந்த மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக அந்தந்த மாநில ஆளுநர்கள் தான் இருப்பார்கள் என்பது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த வழக்கத்தை மாற்றும் விதமாக தற்போது மேற்கு வங்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமனம் செய்யும் வகையில் சட்ட மசோதா ஏற்படுத்தப்பட்டு மிக விரைவில் சட்டசபையில் நிறைவேற்றப்படவுள்ளது.

Previous articleபோடிநாயக்கனூர் அருகே கோர விபத்து! கணவன் கண்முன்னே மனைவி பலியான சோகம்!
Next articleஅதிர்ச்சி! உலகளாவிய நோய்த்தொற்று பாதிப்பால் இறந்தவரின் எண்ணிக்கை 63.21 லட்சமாக அதிகரிப்பு!