ஆளில்லா மின்பயன்பாடு கணக்கு எடுப்பு! இனி தாழ்வழுத்த பிரிவிலும் ஸ்மார்ட் மீட்டர்!!

Photo of author

By Jeevitha

பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே வரும் இக்கால கட்டத்தில் மின் வாரியத்தின் சார்பாக ஆளில்லா மின்பயன்பாடு கணக்கெடுப்பு செயலுக்கு புதிய தானியங்கி மீட்டர்கள் கொண்டுவரப்பட்டன.

மின்வாரியமானது அதற்கான 4ஜி அலைவரிசையில் செயல்படும் சிம்கார்டிற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வருகிறது. அத்தகைய சிம்கார்டுகளானது அலுவலக சர்வரில் சேர்க்கப்படும். ஸ்மார்ட் மீட்டர் மூலமாக மின்வாரிய அதிகாரிகளின் விளக்கியுள்ளபடி  நுகர்வோருக்கு மாதந்தோறும் ஆளில்லா மின்பயன்பாடு கணக்கெடுப்பு மென்பொருள் அடிப்படையில் கட்டணம் அந்தந்த தேதிகளில் தெரிவிக்கப்படும்.

ஏற்கனவே 11000 ஸ்மார்ட் மீட்டர்கள் உயரழுத்த பிரிவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பொருத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது தாழ்வழுத்த பிரிவுகளிலுள்ள வீடுகளிலும் பொருத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வெளிவந்த செய்திக் குறிப்பில் 25000 தானியங்கி மீட்டர்கள் முதற்கட்டமாக  பொருத்தப்பட இருப்பதாகவும் இன்னும் 35000 ஸ்மார்ட் மீட்டர்கள் அடுத்த கட்டங்களாக தாழ்வழுத்த பிரிவிலுள்ள தொழில் நிறுவனங்களில் விரைவில் பொருத்துவதாகவும் கூறியுள்ளனர்.

தமிழக மின்வாரியத்தால் கொண்டுவரப்பட்ட இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டப்பணியில் ஏற்கனேவே சென்னையிலுள்ள தி. நகர் பகுதியில் அமைந்துள்ள 1.42 லட்சம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டிருப்பதை அடுத்து உயர் மற்றும் தாழ்வழுத்த பிரிவிலுள்ள பெரும்பாலான வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பொருத்துவதற்கான திட்டப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றது.