கொரோனா காலத்தில் பாதுகாப்பாக தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்,அனைத்து மாநில அரசியல் கட்சி மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை!
கொரோனா பரவுதலால் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு,கேரளா, மேற்கு,வங்காளம் அசாம், மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தற்போதிலிருந்தே தேர்தலுக்காக கட்சிப் பணிகள் தொடங்கிவிட்டன.ஏன் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இரண்டு பிரதான கட்சிகளுக்குள்ளும் பல குளறுபடிகள் நடந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையமானது கொரோனா காலத்தில் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது எப்படி?தேர்தலுக்காக பாதுகாப்பாக பிரச்சாரம் மேற்கொள்வது எப்படி? போன்ற விவரங்களை ஆலோசனைகளாக,
வழங்கும்படி அனைத்து மாநில அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது.
இதேபோன்று அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளிடமும், இந்திய தேர்தல் ஆணையம் கருத்து கேட்டது.
இந்நிலையில் தற்போது தேர்தல் நடத்துவது தொடர்பாக பெறப்பட்ட அனைத்து ஆலோசனை கருத்துகளையும், ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கூறிய கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையமானது சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் நடத்துவதற்கான பாதுகாப்பான வழிமுறைகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை முடிவுகள் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.