தமிழ்நாட்டில் இன்று முதல் சில நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகளாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் நான்கு புதிய மாநகராட்சிகள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொளிக்காட்சி வாயிலாகத் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இன்றிலிருந்து நான்கு நகராட்சிகளான நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை இனி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகள் என அறிவிக்கப்பட்டது.
ஜூன் மாதத்தில் அமைச்சர் கே. என். நேரு அவர்கள் சட்டப்பேரவையில் இதுவரையிலும் நகராட்சிகளாக வழங்கப்பட்டு வந்த திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகளாக மாற்றப்பட வேண்டும் என்ற மசோதாவை தாக்கல் செய்ததை நிறைவேற்றும் விதமாக தமிழக அரசு இன்று அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாநகராட்சிகளாக மாற்றப்பட்ட இந்த நான்கு நகராட்சிகளிலும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்ற எதிர்பார்ப்பினை உண்மையாக்க முடியும். மேலும் இம்மாநகராட்சிகளுக்கு அருகில் அமைந்துள்ள உள்ளாட்சிப் பகுதிகளிலும் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்கும்.
மேலும் அமைச்சர் கே. என். நேரு அவர்கள் தாக்கல் செய்த மசோதாவின் அடிப்படையில் பெரு நகரங்களில் வசிக்கும் பொது மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கக் கூடும்.
இதன் மூலம் அப்பகுதி மற்றும் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு தரமான சாலைகள், மின்விளக்குகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், பாதாள சாக்கடை போன்ற பெரு நகரங்களுக்கு இணையான வசதிகளை மக்களுக்கு வழங்க முடியுமென்ற அடிப்படையில் நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட நகராட்சிகள் இன்று 4 புதிய மாநகராட்சிகளாக உருவெடுத்துள்ளன.