தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள website-யை upsc வெயிட்டுள்ளது!!

Photo of author

By Pavithra

கொரோனாத் தொற்று காரணமாக பள்ளிக்கல்வி தேர்வுகள் மட்டுமின்றி சில போட்டித் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஜூன் மாதத்தில் முதல் கட்டத் தேர்வும் செப்டம்பர் மாதத்தில் மெயின்ஸ் எனப்படும் இரண்டாம் நிலை தேர்வு நடைபெறுவதாக இருந்தது. கொரோனாத் தொற்று காரணமாக முதல் கட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

மத்திய அரசின் குடிமைப்பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான இந்த தேர்வை 10லட்சத்திற்கும் அதிகமானோர் எழுத உள்ளனர். தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல் கட்டத் தேர்வு வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள upsconline.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என UPSC அமைப்பு தெரிவித்துள்ளது.