நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுகவின் அதிரடி! முன்னாள் பொதுச் செயலாளரின் மகனுக்கு வாய்ப்பு!

0
118

தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பலர் முயற்சி செய்ததன் பலனாக தற்சமயம் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை தற்சமயம் தமிழக அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

மேலும் இந்த தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும், நடைபெற வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன. அதேநேரம் திமுக எப்படியாவது இந்த தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது இந்த தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பை திமுக தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.

அதனடிப்படையில், 11ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் நாகர்கோவில், திண்டுக்கல், உள்ளிட்ட மாநகராட்சிக்கான வேட்பாளர் பெயர் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

குளச்சல், பழனி, கொடைக்கானல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, உள்ளிட்ட நகராட்சிகளின் வேட்பாளர் பட்டியல் விபரம் வெளியாகியிருக்கிறது. அதேபோல கன்னியாகுமரி, வேளாங்கண்ணி, போன்ற பேரூராட்சி வேட்பாளர் பட்டியலையும் அந்த கட்சி வெளியிட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சென்னையில் 188வது வார்டில் சமீபத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவி சமீராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதே போல சென்னை தியாகராயநகரில் மறைந்த அன்பழகனின் மகன் ராஜா ஆன்பழகனுக்கு 140 வது வார்டில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அன்பழகனின் சகோதரர் ஜெ கருணாநிதி தற்போது தியாகராயநகரில் சட்டசபை உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபச்சை மறைந்து வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் புல்வெளிகள்! காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!! காரணம் என்ன?
Next articleபுதுவையில் தான் அரசியல் தந்திரத்தை தொடங்கிய திமுக! ரங்கசாமிக்கு முக்கிய ஆலோசனை!