நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! தமிழகம் முழுவதும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களின் விவரம்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்டவைகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்தது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 18 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் 196 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.