நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! விஜய் மக்கள் இயக்கம் வெற்றிவாகை சூடிய அந்த 3 இடங்கள்!

0
221

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி நடந்தது.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானதாக சொல்லப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 1369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என்று ஒட்டுமொத்தமாக 12601 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

அதன்படி இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம் இதுவரையில் 3 பகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட வேட்ப்பாளர், ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை நகராட்சி 3வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட மோகன்ராஜ், குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட வேல்முருகன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியது அ.ம.மு.க!
Next articleபேரதிர்ச்சி டெபாசிட்டை இழந்த ஆளும் கட்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here