உங்கள் வீட்டில் உருளி உள்ளதா? இதன் மகத்துவம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!

0
292
uruli vastu in tamil

uruli vastu in tamil: இந்த உருளியை நாம் சில வீடுகளில், ஓட்டல்களில், கல்லூரிகளில் மற்றும் கோயில்களில் கூட  உருளியை வாசலில் வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஒரு சிலர் வீட்டின் முற்றத்தில் வைத்திருப்பார்கள். அப்படி இருக்கும் அந்த உருளியில் பூக்கள் வைத்து பார்பதற்கே அழகாக இருக்கும். நாம் எங்கு எல்லாம் இந்த உருளியை பார்க்கிறோமோ, அங்கு எல்லாம் அந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன்பாக இந்த உருளி நமது கண்களில் தென்பட்டுவிடும். அதனை நாம் கண்டதும் ஒரு நேர்மறையான ஒரு ஆற்றல் நமக்கு கிடைத்தது பாேல இருக்கும்.

ஏன் இந்த உருளியை வாசலில் வைக்கிறார்கள். அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை நாம் இந்த பதவில் பார்க்கலாம்.

உருளி பயன்கள்

இந்த உருளியை ஒருவர் வீட்டின் வாசலில் வைத்தால், அவர்கள் வீட்டிற்கு வருபவர்கள் எதிர்மறை ஆற்றலுடன் வந்தால் அதனை எல்லாம் இந்த பஞ்ச பூதத்தில் ஒன்றான நீர் அதனை தடுத்து நேர்மறையான எண்ணத்தை கொடுக்கும்.

அதாவது வெளியில் இருந்து வீட்டிற்குள் வருபவர்கள், அது நம் வீட்டில் உள்ளவர்களாக இருந்தாலும் வெளியில் சென்று பல நிகழ்வுகளை சந்தித்து வந்திருப்பார்கள். அதனால் அவர்களுக்குள் தெரிந்தோ, தெரியாமல் அந்த எதிர்மறை ஆற்றல் ஏற்பட்டிருக்கும். மேலும் சிலர் வீடுகளில் நுழையும் போதே நல்ல எண்ணங்கள் தான் நம் வீட்டிற்குள் வருவார்கள் என்று கூறமுடியாது. அதனால் தான் வாசலில் இந்த உருளி வைத்தால் இது அவர்களிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நிக்கி நேர்மறையான எண்ணத்தை கொடுக்குகிறது.

மேலும் இந்த உருளியை வைத்தால் வீட்டின் வாசல், வீட்டின் ஹால் பகுதியில் வைக்கலாம். மேலும் வீட்டின் வடக்கிழக்கு திசையில் (uruli vaikum thisai in tamil) வைத்தால் மிகவும் நல்லது. செல்வம் பெருகும்.

உருளியில் வைத்திருக்கும் தண்ணீரை தினமும் மாற்றுவது மிக அவசியம்.

உருளியில் வாசனை மலர்களை வைக்கலாம். இது மேலும் நமக்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கும்.

உருளியில் வாசனை திரவியங்கள் சேர்ப்பதற்கு பதிலாக வெட்டி வேர் சேர்க்கலாம். மேலும் உருளயின் உள்ளே ஒரு எலுமிச்சை பழத்தை போட்டு வைக்கலாம்.

மேலும் சிலர் உருளியின் நடுவில் விளக்கேற்றி வைப்பார்கள். இது மிகவும் மங்களகரமான விஷயம். ஐஸ்வர்யம் கிடைக்கும்.

இந்த உருளியை நீங்கள் (uruli vaikum murai in tamil) தொழில் செய்யும் இடம், வீடு, கடைகளில் வைத்துக்கொள்ளலாம். இதனால் மற்றவர்களால் ஏற்படும் கண்திருஷ்டி குறைந்து மனநிம்மதி கிடைக்கும்.

மேலும் படிக்க: நிம்மதி பண வசியம் தரும் சிவப்பு குண்டுமணி ரகசியம்..!! நினைத்தது நடக்கும்..!!