சீனாவின் பிளானை கண்டறிந்த அமெரிக்கா! திட்டம் போட்டு செய்து இருக்கிறது!

Photo of author

By Hasini

சீனாவின் பிளானை கண்டறிந்த அமெரிக்கா! திட்டம் போட்டு செய்து இருக்கிறது!

கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் காரணமாக 2020 மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் தொடர் ஊரடங்குகளும், அதை தடுக்கும் தடுப்பு ஊசிகள் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஏதோ ஒரு திட்டத்தை பரிசீலித்து வருகின்றன. கொரோனாவானது உலகம் முழுவதிலும் உள்ள மக்களை புரட்டிப் போட்டு இருக்கிறது. மேலும் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது.

அதே போல் அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த கொரோனாவானது அலை அலையாக எழும் என்றும் அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். தற்போது இரண்டாம் அலை உலக நாடுகளை அச்சுறுத்தி முடிந்த நிலையில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா என்று பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

கொரோனா மூன்றாம் அலை மீண்டும் ஆரம்பிக்கலாம். இதுவே அதற்கு முதற் கட்டம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உலக அளவில் மொத்த எண்ணிக்கை 19.95 கோடியை தாண்டியுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க அரசு சீனாவின் மீது தொடர்ந்து புகார் கொண்டே இருந்தது. சீனாதான் அதை உருவாக்கியது என்றும், அதன் காரணமாகவே அது குறித்து சீனா ஆய்வு செய்ய மறுக்கிறது என்றும் பல குற்றச்சாட்டுகள் சீனாவின் மேல் வைக்கப் பட்டுள்ளன.

அமெரிக்கா மட்டும் அல்லாமல் வேறு சில உலக நாடுகளும் சீனாவின் மேல் குற்றச்சாட்டு எழுப்பின. மேலும் அதன் காரணமாக சீனாவுடனான செயல்களையும், அங்கிருந்து வந்த செயலிகளையும் தடைசெய்தனர். எல்லா நாட்டிற்கும் கோரோனாவை பரப்பி விட்ட சீனா மூன்றே மாதத்தில் அனைத்தையும் சரி செய்து மீண்டும் வழக்கம் போல இயங்க ஆரம்பித்தது. இது உலக மக்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தற்போது அங்கு கொரோனா அலை மீண்டும் அதிகரித்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும் உலக நாடுகள் பலரும் இதனால் திக்குமுக்காடிப் போகிறார்கள் என்பதே உண்மை. இது குறித்த அறிக்கையை அமெரிக்க குடியரசு கட்சியின் பார்லி, வெளியுறவு குழு பிரதிநிதி மைக் மெக்கால் கொரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் சீனாவின் ஊகான் விலங்குகள் சந்தையில் இருந்து வரவில்லை என்றும், அது ஊகான் ஆய்வுக்கூடத்தின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது என்றும், சில ஆதாரங்கள் ஆணித்தரமாக கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வுக்கூடத்தில் மனிதரை தாக்கும் வகையில் கொரோனா வைரஸை உருவாக்கவும், இதுபற்றி வேறு யாரும் அறியாதபடி மறைப்பதற்கான பணிகளும் நடந்தேறியுள்ளன. அதற்கு கூட எங்களிடம் ஆதாரம் உள்ளது என்றும் கூறியுள்ளனர். 2019ஆம் ஆண்டு செப்டம்பருக்கு முன்பாகவே கொரோனா வைரசை பரவ விட்டு இருப்பதாகவும், அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வகத்தில் அபாயகரமான கழிவுகளை பராமரிக்கும் பிரிவை சீரமைக்க நீதியும் கூறப்பட்டுள்ளது. இதற்காக 11 கோடி ரூபாய் ஒதுக்கும்படி ஆய்வக நிர்வாகம் சீன அரசிடம் விண்ணப்பித்தும் குறிப்பிடத்தக்கது. ஆய்வகம் செயல்படத் துவங்கி இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அபாயகரமான கழிவுகளை கையாளும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.