இந்தியாவைப் பொருத்தவரையில் எப்போதும் ரஷ்யாவிற்கு நாம் தனி இடம் கொடுத்து வைத்திருக்கிறோம் நம்முடைய நீண்டகால நண்பனென்றால் அது ரஷ்யா தான். ஏனென்றால் பல ஆபத்தான சமயங்களில் நமக்கு உறுதுணையாக இருந்தது ரஷ்யா தான்.மேலும் நம்முடைய ராணுவத்தில் இருக்கக்கூடிய போர் தளவாடங்கள் சற்றேறக்குறைய 75 சதவீதத்திற்கும் மேல் ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்தது தான்.
அனைவரும் நினைப்பதைப் போல இந்த ஆயுதக் கொள்முதல் என்பது அவ்வளவு எளிதான விஷயங்கள் கிடையாது, ஒரு நாட்டிடமிருந்து ராணுவ தளவாடங்கள் வாங்குகிறோமென்றால் அந்த நாட்டின் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று தான் அர்த்தம்.
அதோடு பல இக்கட்டான சூழ்நிலைகளில், நமக்கு உற்ற தோழனாக நம் பக்கம் நின்று எதிரிகளை விரட்டியடித்ததில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கிறது.
ஐ.நா சபையை பொருத்தவரையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடு என்ற அந்தஸ்தை இன்னமும் பெறவில்லை ,ஆனால் ஒருவேளை ஐநா சபையில் நமக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இருந்து அங்கே அந்த பிரச்சனையை எப்படி முறியடிக்குமோ அதேபோல ரஷ்யா நமக்காக செயல்படும் அந்தளவிற்கு ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்குமுள்ள நட்பு ஆழமாக இருந்து வருகிறது.
தொடக்கத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா எதிரியாகவே பார்க்கப்பட்டது. பல சமயங்களில் இந்தியாவிற்கு எதிரான வேலைகளில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆனால் சமீப காலமாக இந்தியாவின் வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட அமெரிக்கா இந்தியாவுடன் நட்பு பாராட்ட விரும்புகிறது. அது பல சமயங்களில் வெளிப்படையாகவே தெரிந்திருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் அமெரிக்காவின் கோரிக்கை என்னவென்றால் அது மறைமுகமாக இந்தியாவிற்கு உணர்த்தும் செய்தி ரஷ்யாவின் நட்பை விட்டு விடுங்கள் என்பதுதான். ஆனால் இந்தியாவைத் தன்னுடைய நீண்டகால நண்பரான ரஷ்யாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க தயாராகவில்லை.
இந்த நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.இதற்கு நடுவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் காணொளி மூலமாக உரையாடியிருக்கிறார்கள் .
அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனின் புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது கவலையளிப்பதாக இருக்கிறது, இதற்கு இந்தியா உடனடி கண்டனம் தெரிவித்ததுடன், போதிய விசாரணை நடத்தவும் அறிவுறுத்தியது. இரு நாடுகளுக்குமிடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் போரை முடிவுக்கு கொண்டு வரும் வாய்ப்புண்டாகும் என்று நம்புகிறேன் என தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமெரிக்க அதிபர், உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா செய்து வரும் உதவிகளை பாராட்டுவதாகவும், இந்த போர் காரணமாக, ஏற்படுகின்ற பாதிப்புகள், ஏற்படவிருக்கும் தாக்கங்களை தொடர்ந்து கண்காணித்து நிலைமையை எப்படி சமாளிப்பது என்பதில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் வரும் மே மாதம் 24ஆம் தேதி ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள குவாட் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.