உக்ரைன் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே நடந்து வரும் போருக்கு நடுவே போலந்துக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர்!

Photo of author

By Sakthi

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி திடீரென்று போர் தொடுத்தது.உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா இந்தப் போரை தொடுத்திருக்கிறது. அதாவது தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைந்து விட்டால் தனக்கு பாதிப்பு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் ரஷ்யா இந்த தாக்குதலை தொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.இதற்கிடையில் சீனா திடீரென்று ரஷ்யாவின் பக்கம் சாயத் தொடங்கியிருக்கிறது அதாவது ரஷ்யாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா மேற்கொண்டுள்ளது. அதோடு ஐநா சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இந்தியாவோ அந்த வாக்கெடுப்பில் வாக்களிக்கவுமில்லை, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கவுமிவில்லை, நடுநிலையாக இருந்து விட்டது.
இந்த சூழ்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இன்று 26வது நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி வருகின்ற சூழ்நிலையில், ரஷ்யப் படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ் ,கார்கிவ், மரியுபோல், உள்ளிட்ட நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனால் உக்ரைன், ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளிடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது, இந்தப் போரில் ஆயிரக்கணக்கான நபர்கள் பலியான சூழ்நிலையில் போரை நிறுத்துவதற்காக பல்வேறு நாடுகள் முயற்சி செய்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.இதற்கு நடுவில் ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக, லட்சக்கணக்கான பொதுமக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகிறார்கள்.

போலந்து நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கின்றது. உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதும் அந்த நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு உக்ரைனிலிருந்து வரும் அகதிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போலந்து பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ரீதியிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்வரும் 25ஆம் தேதி அந்த நாட்டிற்கு செல்லவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பயணத்தின்போது போலந்து அதிபர் ஆண்ட்ரிச் டுடாவை ஜோ பைடன் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் என சொல்லப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் மற்றும் போலந்தில் ஏற்பட்டிருக்கின்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட விவகாரங்களுக்கிடையே போலந்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.