ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது.இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில், சற்றேறக்குறைய 2 வார காலமாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது உக்ரைனிலுள்ள பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருக்கின்றன .
பல முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள் அந்த நாட்டின் தலைநகரை நோக்கி தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகின்றன. அவர்களை தடுக்கும் முயற்சியில் உக்ரைன் நாட்டு ராணுவம் ஈடுபட்டுவருகிறது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு இரவு பகலாக ஈடுபட்டு வருகிறது. இதுவரையில் 18,000 பேர் வரையில் உக்ரைனிலிருந்த இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவப் படைகளும், ரஷ்ய படைகள் மீது உக்ரைன் ராணுவப் படைகளும், தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போரில் ரஷ்யாவின் தரப்பில் பாதுகாப்பு படையினர்,உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என்று 2 தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா இன்னும் தீவிரப்படுத்தலாம் என்று அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சிஐஏ தலைவர் தெரிவித்திருக்கிறார்.
உக்ரைன் மீதான தாக்குதல் திட்டமிட்டபடி செல்லாததால், உலகளவில் தனித்து விடப்பட்டதால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மிகவும் கோபமாக இருக்கிறார் தோல்வியடையக்கூடாது என அவர் கருதுகிறார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
பொதுமக்கள் உயிரிழப்புகள் தொடர்பாக கவலையில்லாமல் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்தலாம் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.