அமெரிக்காவின் 46வது அதிபராக ஜூபிடர் ஜனவரி மாதம் 20ம் தேதியான நேற்று இரவு இந்திய நேரப்படி 10.20 மணி அளவில் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவியேற்று வைத்தார். அதன்படி கிறிஸ்தவர்களின் புனித நூல் பைபில் மீது தன்னுடைய கையை வைத்துக்கொண்டு உறுதிமொழியை வாசித்து அமெரிக்க அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் ஜோபிடன்
அதிபரான பிறகு அமெரிக்க அதிபராக நிகழ்த்திய முதல் உரையில், ஒரு கலகக்காரர்கள் மக்களுடைய விருப்பத்தை நாசம் செய்து விட இயலும் என எண்ணியிருந்த சில நாட்களுக்கு பிறகு நாம் இங்கே நின்று கொண்டிருக்கிறோம். அது அது எப்போதுமே நடக்காது என்று தெரிவித்தார்.
அதோடு நமக்கு முன் தீர்த்து வைக்க வேண்டிய பிரச்சினைகள் அநேகம் இருக்கின்ற நிலையிலே, நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. அமெரிக்க மக்களுக்கு தேவைப்படும் நிவாரணங்களையும் உறுதியான நடவடிக்கைகளையும் அமெரிக்க அதிபர் என்ற முறையில் செவ்வனே செய்து எல்லா மக்களுக்கும் உறுதுணையான அதிபராக இருப்பேன் என்று தெரிவித்திருக்கிறார் ஜோபிடன்.
நம்முடைய நாட்டில் ஜனநாயகம் மறுபடியும் எழுச்சியுடன் மலரத் தொடங்கும் என்று தெரிவித்திருக்கிறார் அவர். முன்னதாக பதவி ஏற்கும் ஒரு சில மணி நேரம் முன்னால் வரை அமெரிக்காவின் வெள்ளை வெள்ளை மாளிகையில் இருந்த முன்னாள் அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் ஃப்ளோரிடாவிற்கு கிளம்பிச் சென்றுவிட்டார்.
அவர் வெள்ளை மாளிகையை விட்டு செல்வதற்கு முன் தன்னுடைய இறுதி கருத்து தெரிவிக்கும்போது, நான் நாட்டின் மக்களை மிகவும் நேசித்து கொண்டிருக்கிறேன் இதுவரையில் எனக்கு கிடைத்து இருப்பது மிகப்பெரிய கௌரவம். நான் விடை பெற்றுக் கொள்ள போகிறேன் ஆனால் இது நெடுங்காலத்திற்கு கிடையாது நாம் மறுபடியும் ஒருவரை ஒருவர் சந்திக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட அமெரிக்காவின் அதிபர் ஜோபிடன் அவர்களுக்கும், புதிய துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போன்ற பலரும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். அதேபோல உலகத்தில் இருக்கக்கூடிய முக்கிய நாடுகளின் தலைவர்கள் அனைவரும் அமெரிக்க அதிபருக்கு தொடர்ச்சியான வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.