இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்! இந்த மாவட்ட இளைஞர்கள் எல்லாம் ரெடியா இருங்க!

Photo of author

By Sakthi

திமுக இளைஞர் அணியில் தர்மபுரி திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் காலியாக இருக்கும் அமைப்பாளர் துணை அமைப்பாளர் உறுப்பினர்களை நிரப்புவதற்கு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றார் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின்.

கோவை மேற்கு, கோவை கிழக்கு, கோவை புறநகர் வடக்கு ,மற்றும் கிழக்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, திருப்பூர் கிழக்கு, மற்றும் மத்திய திருப்பூர் ,தர்மபுரி மேற்கு தர்மபுரி கிழக்கு, ஆகிய மாவட்டங்களில் காலியாக இருந்து வரும் மாவட்ட அமைப்பாளர், மாவட்ட துணை அமைப்பாளர், ஆகிய பொறுப்பில் உங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை அனுப்ப கூறியிருக்கின்றார் உதயநிதி ஸ்டாலின்.

40 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பொறுப்புகளுக்கு வரலாம் எனவும், அவர்கள் தங்களுடைய விபரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து 12-11-2020 அன்றைய தினம் மாலை 6 மணிக்குள் அந்தந்த மாவட்டங்களின் ,கழகங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.