உத்தரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை தங்களுடைய நட்சத்திர அதிபதியாக இருந்து வரும் சனிபகவானின் முழுமையான நல்ல உதவி பெறுவதற்கு வருடம் ஒரு முறையாவது திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று சனீஸ்வரனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை உள்ளிட்டவற்றை செய்து, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது.
வாரம்தோறும் வரும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு நெய் தீபமேற்றி இனிப்பு அல்லது கற்கண்டு உள்ளிட்டவற்றை நைவேத்தியம் வைத்து வழிபட்டு வர வாழ்வில் சிறப்பான பலன்களை காணலாம் என்கிறார்கள்.
சனிபிரதோஷ தினங்களில் சிவபெருமானையும், அம்பாளையும், வழிபட்டு வந்தால் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாள்தோறும் தாங்கள் உணவு உண்பதற்கு முன்பாக காலையில் சனி பகவானின் வாகனமாக இருந்து வரும் காகங்களுக்கு சிறிது உணவை வைத்து பிறகு சாப்பிடுவது சனீஸ்வரபகவானின் அருட்பார்வை உங்களுக்கு கிடைக்கும்.
ஆகவே வாழ்வில் பல நன்மையான பலன்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு ஏதாவது சனிக்கிழமை தினத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை மற்றும் இனிப்புகளை தானம் செய்வது மிகவும் நன்மை தரும்.
ஆலயங்களில் 2,4,6, போன்ற இரட்டைப்படை எண்ணிக்கையிலிருக்கும் பசு மாடுகளுக்கு ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் இரட்டை வாழைப்பழங்களை சிறிது தேன் தடவி அதற்கு உணவாக கொடுப்பதன் மூலமாக உங்களுடைய நட்சத்திரத்திற்கு அதீத அதிர்ஷ்டங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இது ஒரு சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது.