12 முதல் 15 வயதுவரை உள்ளோருக்கு தடுப்பூசி உறுதி! எப்.டி.ஏ. அனுமதி!

Photo of author

By Hasini

12 முதல் 15 வயதுவரை உள்ளோருக்கு தடுப்பூசி உறுதி! எப்.டி.ஏ. அனுமதி!

உலகம் முழுவதிலும் கொரோனா நோயின் இரண்டாவது அலை பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.அதை தொடர்ந்து நோய் தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தயாரித்த தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசிகள் அனைத்தும் உலக சுகாதார நிறுவனமான யுனிசெப்-ன் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.இந்நிலையில் அமெரிக்க பன்னாட்டு மருந்து நிறுவனமான பைசர் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயோ என் டெக் நிறுவனமும் சேர்ந்து  ஒரு கொரோனா தடுப்பூசி தயாரித்துள்ளது.

இந்த தடுப்பூசியானது கொரோனா நோய் தொற்றுக்கு அதிக அளவில் எதிர்வினையாக்கும் ஆற்றல் மிக்கது என பைசர் அறிவித்துள்ளது.இந்த தடுப்பூசியானது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப் படுகிறது.

மேலும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியானது உருமாற்றம் அடைந்த கொரோனாவின் தாக்குதலுக்கு மிகச்சிறந்த தடுப்பு மருந்தாக செயல்படுகிறது. மற்றும் மிக சிறந்த பலன்களை அளிக்கிறது என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவசரகால பயன்பாட்டுக்கு பைசர்-பயோ என் டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசியை 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அனுமதி அளித்துள்ளது.உலக அளவில் பதின் பருவ கொரோனா தடுப்பூசி போடுவது இதுவே முதல் முறை ஆகும்.

பைசர் நிறுவனம் தங்களின் தயாரிப்பான தடுப்பூசியை பதின்பருவ சிறார்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருக்கிறது.

அதே போல் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதில் அமெரிக்கா முதலிடமும், இந்தியா இரண்டாவது இடமும் பிடித்திருப்பது கவலைக்குரியதாகும் விசயமாகும்.