18 வயதிற்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி பள்ளிகளுக்கு சென்று நடைபெற உள்ளது! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

Photo of author

By Sakthi

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்று இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது, தமிழ்நாட்டிலும் இந்த புதிய வகை நோய் தொற்று தொடர்பான அச்சுறுத்தல் அதிகமாக தான் இருந்து வருகிறது. நோய்த்தொற்றை வெற்றி பெறும் ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது, தமிழ்நாட்டில் நேற்று 16-ஆவது தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதற்கிடையில் 15 முதல் 18 வயது வரை இருக்கின்ற சிறுவர், சிறுமிகளுக்கு ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். அதேபோல ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், அவர் கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கான தடுப்பூசி அளித்தல் பணியில் ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று பேட்டியளித்திருந்தார். சென்னை அடையாறு மசூதி காலனியில் நடைபெற்ற 16ஆவது தடுப்பூசி முகாமில் பங்கேற்று அதனை தொடங்கி வைத்த அமைச்சர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது,

தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளார்கள், மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஜனவரி மாதம் 3ஆம் தேதியே இவர்களுக்கான தடுப்பூசி போடும் பணியை சைதாப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளோம் என்றார்.

அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான கருப்பு நிறத்தில் பனியன் ஆரம்பமானது போல தமிழ்நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்ட 1 கோடியே 4 லட்சம் நபர்களுக்கும் முன் களப்பணியாளர்கள், 9 லட்சத்து ௭௮நபர்களுக்கும் ஜனவரி மாதம் 10 ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பொது இடங்களில் முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

கோவேக்சின் தடுப்பூசி செலுத்திகொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளலாம் என்ற காரணத்தால், 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்துவதற்காக ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த தடுப்பூசியை பொருத்தவரையில் 25 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றன. ஜனவரி மாதம் 3ஆம் தேதி வரையில் 7 முதல் 8 லட்சம் தடுப்பூசிகள் செலவாகும், மீதம் 22 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

அந்த விதத்தில் தமிழ்நாட்டில் 33 லட்சம் நபர்கள் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் உள்ளார்கள். ஆகவே இன்னும் கூடுதலாக 10 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கேட்டிருக்கின்றோம். முழுவீச்சில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் ஆரம்பமாகும் என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இதுவரையில் 8 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 758 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. 84.87% நபர்கள் முதல் தவணைத் தடுப்பூசியும், 55.77 சதவீதமாக இரண்டாவது தவணை தடுப்பூசியையும், செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். கையிருப்பில் 80 லட்சம் தடுப்பூசிகள் இருக்கின்றன. ஏறத்தாழ 95 லட்சம் நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திகொள்ளாமல் உள்ளார்கள் என்று கூறியிருக்கிறார்.

அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி இன்று தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது, அவர்கள் எல்லோரும் தயக்கமில்லாமல் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும். 77 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட 55 லட்சத்து 30 ஆயிரத்து 900 பேர் இருக்கிறார்கள்.

சென்னையில் முதல் தவணை தடுப்பூசியை மாநில அளவிலான சதவீதத்தை விடவும் கூடுதலாக 89% பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி மாநில அளவிலான சதவீதத்தை விடவும் கூடுதலாக 66 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டு இருக்கிறது.

இதுவரையில் 34 பேர் புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், அதில் 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள், 22 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதேபோல புதிய வகை நோய் அறிகுறி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை பெற்று வரும் எல்லோரும் நலமுடன் உள்ளார்கள் என்று கூறியிருக்கிறார்.

நாட்டிலேயே கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 700 பேருக்கு இதுவரையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.