இனி 2 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! உலகில் முதல் முறையாக கியூபாவில்!

Photo of author

By Hasini

இனி 2 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! உலகில் முதல் முறையாக கியூபாவில்!

தற்போது கொரானா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் உலகம் முழுவதும் பரவி பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதன் காரணமாக உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவருக்கும் தடுப்பூசிகள் போட அறிவிக்கப்பட்டு உள்ளன.

பல நாடுகளில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போட தொடங்குவதாக பேச்சு வார்த்தைகள் உள்ளன. இந்த நிலையில் உலகிலேயே முதல் முறையாக இரண்டு வயது குழந்தைகளுக்கு கூட தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் அங்கு மருத்துவ பரிசோதனை முடிவடைந்ததை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது.

இந்த சூழலில் திங்கட்கிலமையான நேற்று முதல் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கியூபா அரசு ஆரம்பித்து உள்ளது. கியூபாவின் மத்திய மாகாணமான சியன்பியூகோஸ் பகுதியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் பணியை ஆரம்பித்து விட்டது. சீனா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசுலா ஆகிய நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது.

ஆனால் கியூபாவில் அதை முதன் முதலில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. தற்போது கியூபாவில் போடப்பட்ட தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இதுவரை எதுவும் ஒப்புதல் அளிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கு அக்டோபர், நவம்பரில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட்ட பின்னர் தான் பள்ளிகள் திறக்கும் என்று அரசு அறிவித்ததை அடுத்து இந்தத் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.