நாஞ்சில் சம்பத்தை வறுத்தெடுத்த ரஜினி ரசிகர்கள்!

Photo of author

By Sakthi

ரஜினி மன்றம் ஆரம்பித்த புதிதில் சுவரொட்டிகளில் ரஜினிக்கு அடுத்தபடியாக அப்போது மன்ற தலைவராக இருந்த சத்தியநாராயணன் படம் தான் இருக்கும் அதற்கு அடுத்ததாக வந்த சுதாகரன் படம் இருக்கும் ஆனாலும் ரஜினி இப்போது மன்றத்தை கட்சியாக மாற்ற இருக்கும் காரணத்தால், இனி ரசிகர்கள் அடிக்கும் சுவரொட்டிகளில் கட்சியின் மேற்பார்வையாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழருவிமணியன் படத்தையோ அல்லது தலைமை ஆலோசகராக அறிவிக்கப்பட்டிருக்கும் அர்ஜுன மூர்த்தியின் பெயரையோ அச்சிட வேண்டாம் எனவும் தன்னுடைய புகைப்படத்துடன் அந்தந்த பகுதி நிர்வாகிகளின் புகைப்படத்தையும் போட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து இருக்கின்றார் நடிகர் ரஜினிகாந்த்.

இதன் காரணமாக எதிர்க் கட்சியான திமுகவின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வச்சாண்டா ஆப்பு ரஜினிகாந்த் காமராஜர் சீடன் தமிழருவி மணியன் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு என மிக மிகக்கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அவருடைய இந்த விமர்சனத்திற்கு பலரும் பதிலடி தந்து வருகிறார்கள். அவர் வைகோவின் ம.தி.மு.க.வில் இருந்த நேரத்தில் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் விமர்சனம் செய்த காணொளிகளையும், இப்போது திமுகவில் இருக்கும் நேரத்தில் அதிமுகவை விமர்சனம் செய்யும் காணொளிகளையும், இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த காணொளிகளில் அதற்கு கீழே கண்டிப்பாக நாயும் பிழைக்காது இந்தப் பிழைப்பு எனும் வாசகம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது அதோடு சில கடுமையான வார்த்தைகளையும் பிரயோகம் செய்து பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

மானம் இருப்பவன் உங்களை கட்சியில் இணைத்து இருக்கமாட்டான், தங்களுக்கு மானம் இருந்திருந்தால் திமுகவில் இணைந்து இருக்க மாட்டீர்கள் எனவும், உங்களை போல் யாரும் இருக்க மாட்டார்கள் என நம்புகின்றோம் எனவும் ,பல கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்திருக்கிறார்கள். மரியாதையாக பேச தெரியவில்லை மரியாதை என்றால் என்ன என்பது பற்றி தமிழருவி மணியன் இடம் போய் கற்றுக்கொள்ளுங்கள், வாங்கிய காசுக்கு மேலே பேசுகின்றான் என்பதுபோல விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

உங்களை விடவும் நக்கிப் பிழைப்பது யார் அதைப்பற்றி தாங்கள் பேசலாமா எனவும், சோழ ராணி சசிகலா என்று பெயர் வைத்தவர் தானே நீங்கள் நான்காவது கட்சி நான்காவது தலைவர் இப்படியே போய்க்கொண்டிருந்தால் விளங்கிவிடும் என நெட்டிசன்கள் வசைபாடி வருகிறார்கள்.