வடகரை மயான பூமியை சீர்படுத்தி தர சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கரிடம் கோரிக்கை

Photo of author

By Ammasi Manickam

தென்காசி:

தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்க வருகை தந்த கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் அவர்களிடம் வடகரை அனைத்து இந்து சமுதாய பொது மக்களின் சார்பாக முன்னாள் அறங்காவலரும் திமுக வடகரை பேரூர் கழக பொருளாளருமான அருணாச்சலம் மற்றும் வடகரை பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் நடராஜ முதலியார்,ராகவசாமி மற்றும் இந்து சமுதாய பொதுமக்கள் வடகரை மயான பூமியை சீர்படுத்தி தரும்படி கோரிக்கை மனுவை அளித்தனர்.

இம்மனுவில் கூறியிருப்பதாவது வடகரை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து இந்து சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட மயானபூமியை சீர்படுத்தி மயான பூமியை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பித்தர வேண்டும் எனவும் மயான பூமியில் பொதுமக்கள் குளிப்பதற்காக நீர்மூழ்கி மோட்டார் வசதியுடன் கூடிய குளியலறை அமைத்துத் தரவேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் உறுதியளித்தார்.