சினிமாவில் வந்தது! நிஜத்தில் நடக்கின்றது! நடிகரின் குமுறல்!

Photo of author

By Hasini

சினிமாவில் வந்தது! நிஜத்தில் நடக்கின்றது! நடிகரின் குமுறல்!

கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டத்தையும், உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.

அனைத்து மாவட்ட மக்களும் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றுக்கள் பரவி வருவதனால் மக்களும் நிறைந்த அச்சம் அடைந்து உள்ளனர்.கொரோனா வை தொடர்ந்து கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருவதும் குறிப்பிடப்பட்டது.இதை பற்றி வடிவேலு கூறுகையில்:

கொரோனாவால் பீதி ஏற்பட்டு உள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மருத்துவ உலகத்தையும், மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை என்றும், என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்கிறார்.

Vadivelu
Vadivelu

இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் ஆட்கள் யாரும் தயாராக இல்லை. படம் பார்க்க வருவதற்கும் யாரும் இல்லை. அப்புறம் எப்படி நான் தனியாக போய் நடிப்பது.இறைவன் கொரோனா என்ற ஒரு படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறான் என்றும், கொரோனா படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை. அதை தூக்கினால்தான் எல்லோரும் வெளியே வர முடியும் என்றும் கூறியுள்ளார்.

ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால் விட்டு நடித்து இருந்தேன். அதை வெறும் படமாகத்தான் செய்தேன். ஆனால் உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று உணர வைத்து இருக்கிறான் இறைவன்.பயம் வேண்டாம்.சீக்கிரம் நிலைமை சரி ஆகட்டும். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம் என்றும் கூறினார்.