டபுள் கேம் ஆடும் வைத்தியலிங்கம்.. முக்கிய தலைவருடன் தொடரும் பேச்சுவார்த்தை!!

0
444
Vaidyalingam playing a double game.. Continued talks with the main leader!!
Vaidyalingam playing a double game.. Continued talks with the main leader!!

ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மூன்றாம் நிலை கட்சிகளிடையே நடைபெற்று வருகிறது. இவ்வாறான பரபரப்பான சூழலில் அதிமுகவில் பல்வேறு பிரிவினைகளும், தலைமை போட்டியும் நிலவி வருகிறது. இபிஎஸ் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதிலிருந்தே இந்த பிரிவினைகள் தொடர்கிறது.

இதனை மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்தது தான் நால்வர் அணி. ஏற்கனவே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், நால்வர் அணி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், வைத்தியலிங்கமும் கூடிய விரைவில் திமுகவில் இணைய இருக்கிறார் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் அதில் புதிய திருப்பமாக ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

வைத்தியலிங்கம் இபிஎஸ்யிடம் இன்னுமும் தொடர்பில் தான் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அதிமுகவில் தான் மீண்டும் இணைய வேண்டுமென்றால் ஓபிஎஸ்யும் சேர்த்து கொள்ள வேண்டுமென்று நிபந்தனை விதித்துள்ளாராம். இதனால் இவர், டபுள் கேம் ஆடுகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக திமுகவில் இணைவது போல அனைவரிடமும் காட்டி விட்டு, கடைசி நேரத்தில் ஓபிஎஸ்யை விட்டு விலகி அதிமுகவில் வைத்தியலிங்கம் இணையும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Previous articleஇளைஞர்களின் ஆதரவை இழந்த உதயநிதி.. இதற்கு காரணம் இந்த கட்சியா!!
Next articleஉங்கள சேத்துகிட்ட எங்க பவர் போய்டும்.. கரார் காட்டும் விஜய்!! கடும் கோபத்தில் கட்சி தலைவர்கள்!!