DMK MDMK: 2026 இல் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதி தான் திமுகவில் நிலவும் தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரமாகும்.
காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை கேட்பது ஸ்டாலினுக்கு பெரும் பாடாக இருக்கும் சமயத்தில் தற்போது புதிதாக திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து புதிய கட்சி துவங்கி, பின்னர் திமுக கூட்டணியிலேயே இணைந்த வைகோ திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி வருவது திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசின் செயல்பாடுகளில் உள்ள தவறை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது தமிழகத்திற்கு பேராபத்து என்றும், போதையின் உச்சமான டாஸ்மாக்கை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். மேலும் மாணவர்களிடையே சாதிய மோதல் ஏற்படுவது வேதனையின் உச்சம் என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
வைகோவின் இந்த கருத்து, ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் திமுகவிற்கு எதிராக இருக்கும் இவரது பேச்சு, மதிமுகவிலிருந்து வெளியேறிய மல்லை சத்யா வைகோவிற்கு மத்திய அரசுடன் இணையும் ஆர்வம் இருக்கிறது என்று கூறியதை உறுதிப்படுத்தியுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அண்மை காலமாக திமுகவில் நிறைய குழப்பங்கள் நிலவு வரும் காரணத்தால் தற்போது இந்த பிரச்சனையையும் திமுக தலைமை எப்படி சமாளிக்கும் என்பது கேள்வி குறியாக உள்ளது.

