எல்லாம் போச்சு! அனைத்தையும் சீர்குலைத்த மத்திய அரசு!

0
136

எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கின்றார்.

இதுகுறித்து அவர் வீட்டு இருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் குழுவில் சுப்பையா சண்முகம் என்றவரை உறுப்பினராக மத்திய அரசு நியமித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அவர் கார் நிறுத்துவதற்கான இட ப்பிரச்சனையில், பக்கத்துவீட்டு சுவரில் சிறுநீர் கழித்தவர் என்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி இருக்கின்றன 62 வயது பெண்களுக்கு தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வருபவர். எனவே இவர் மீது போலீசில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படி பண்பாடு இல்லாத முறையில் நடந்துகொள்ளும் இவரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் குழுவில் வைத்திருந்தால் எய்ம்ஸ் என்ற உயர்ந்த மருத்துவ நிறுவனத்தின் நன்மதிப்பை குறைக்கின்ற ஒரு செயல் என தான் நினைக்க தோன்றுகிறது.

சுப்பையா சண்முகம் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பயிற்சி பெற்று பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் பொறுப்பில் இருந்தவர்.

பாஜக ஆட்சியில் அமர்ந்த முதல் நாள் முதல் நடுநிலையாக இயங்க வேண்டிய அனைத்து நிறுவனங்களிலும் சங்பரிவார் அமைப்புகளை சார்ந்தவர்களை உட்புகுத்தி வருகின்றது.

அந்த நபர்களும் அனைத்து நிறுவனங்களையும் முடிந்தவரையில் சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர்கள் குழுவிலிருந்து சுப்பையா சம்பவத்தை வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டு இருக்கின்றார்

Previous articleகுருட்டு நம்பிக்கையில் இருக்காதீங்க! கார்த்தி சிதம்பரம் பொளேர்!
Next articleஎம்எல்ஏ செய்த காரியத்தால்! நெகிழ்ந்து போன முதியவர்!