இளையராஜா-வைரமுத்து பிரிவுக்கு காரணம் தான் என்ன?

Photo of author

By Priya

Ilayaraja issue in tamil: இசை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் இளையராஜா. இவரின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூறவேண்டும். இன்றளவும் இவரின் இசையில் உள்ள பாடல்களை கேட்டால் நாம் மெய் மறந்து எங்கோ சென்று விடுவோம். அந்த அளவிற்கு இவரின் இசை மனதை மயக்கும் என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் ஒரு காலத்தில் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரின் இணையில் உருவான பாடல்கள் அனைத்தும் மூலை முடுக்கில் உள்ள அனைவரையும் சென்றடைந்தது என்று தான் கூறவேண்டும். அந்த அளவிற்கு இவர்களின் இணையில் உருவான பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றது.

இளையராஜா வைரமுத்து நட்பு:

வைரமுத்து முதன் முதலில் இயக்குநர் பாரதிராஜாவிடம் சென்று தனது திருத்தி எழுதாத தீர்ப்புகள் என்ற கவிதைப் புத்தகத்தை கொடுத்து இதனை தாங்கள் பயன்படுத்திக்க முடிந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறி அந்த புத்தகத்தை கொடுத்துள்ளார். அந்த புத்தகத்தை படித்த பாரதிராஜா வியந்து இளையராஜாவிடம் கொடுக்க, பிறகு வைரமுத்துவிற்கும், இளையராஜாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு இளையராஜாவின் இசையில் வைரமுத்து பாடல் வரிகளை எழுதி கொடுத்துள்ளார்.

வைரமுத்து பாடல்கள்:

அவ்வாறு உருவான பாடல்கள் தான் நிழல்கள் படத்தில் வரும் இது ஒரு பொன்மாலை பொழுது பாடல். இந்த பாடல் மாபெரும் வெற்றி பெற்றது. பிறகு இருவரும் இணைந்து பாடல் அமைக்க, வைரமுத்துவிற்கும், இளையராஜவிற்கும் இடையில் மனகசப்பு ஏற்பட்டுள்ளது. வைரமுத்து ஒரு படத்தில் எல்லா பாடல்களையும் அவர் எழுதுவார்.

இளையராஜா வைரமுத்து பிரிவு:

ஆனால் இளையராஜா தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் ஒரு பாடலை வாலியை வைத்து எழுத வைத்துள்ளார். இதன் மூலம் இவருக்கும் மனகசப்பு (ilayaraja vairamuthu issue) ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர்களின் இணை முழுவதுமாக பிரிந்துள்ளது.

அதன் பிறகு வைரமுத்து சிறிது காலம் வாய்ப்புகள் இல்லாமல் இருக்க, அதன் பிறகு வந்தவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். வைரமுத்து ரஹ்மான் இசையில் பாடல் வரிகளை எழுத அந்த பாடல்கள் முழுவதும் வெற்றி பெற்றது என்று தான் கூறுவேண்டும்.

இளையராஜா வைரமுத்து பிரச்சனை:

இந்நிலையில் படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்று பேசப்பட்டு வருகிறது. உண்மையில் இசை எவ்வளவு பெரியதோ, அந்த அளவிற்கு மொழி பெரியது. மொழி எவ்வளவு பெரியதோ அந்த அளவிற்கு இசை பெரியது. இது இரண்டும் இணைந்தது தான் பாடல். இதனை அறிந்தவன் ஞானி, அறியாதவன் அஞ்ஞானி  என்று வைரமுத்து கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் வைரமுத்துவிற்கு காட்டமாக பதில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் எங்களால் வளர்ந்தவர், எங்களை இப்படி பேசுகிறார், மனிதனுக்கு நன்றி உணர்வு வேண்டும் என்றெல்லாம் கூறி பதிவிட்டிருந்தார். இது சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மதுரையில் வணிகர்கள் முழக்க மாநாட்டில் கலந்துக்கொண்ட வைரமுத்துவிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி கேட்டனர். ஆனால் அதற்கு வைரமுத்து நான் பதிலளிக்க மாட்டேன் நீங்கள் வேறு கேள்வி கேளுங்கள் என்று கூறிவிட்டார்.

இவ்வாறாக இருவருக்கும் இடையில் நடக்கும் இந்த பிரச்சனை முடிவுக்கு வராது என்று சினிமா துறையில் இருப்பவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தானாக வந்த வாய்ப்பை நழுவ விட்ட கரன்..! கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட விக்ரம்..!