TVK: நடிகர் விஜய் சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் அவர் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் 2026 தேர்தலுக்காக முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றார். தொண்டர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் போட்டியிடப் போகும் தொகுதி தொடர்பாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில் திமுகவில் அண்மையில் இணைந்த வைஷ்ணவி விஜய் போட்டியிடக் கூடிய தொகுதியில் களமிறங்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழக கட்சியின் கூட்டம் ஒன்றில் விஜய் போட்டியிடப் போகும் தொகுதி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டால் சாதகமாக அமையும் என்ற சர்வே எடுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தர்மபுரியில் போட்டியிடுவது பற்றியும் ஆலோசனை செய்துள்ளார் என கூறப்படுகின்றது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருந்த வைஷ்ணவி, அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
பெண்களுக்கு மதிப்பு இல்லை, கட்சிக்காக பணியாற்றவர்களுக்கு மதிப்பு இல்லை, நீண்ட காலம் கட்சிக்காக வேலை செய்தவர்களுக்கு மதிப்பு கிடையாது உள்ளிட்ட புகார்களை அவர் வைத்த நிலையில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் வைஷ்ணவி அதே தொகுதியில் களமிறக்குமா திமுக என்றும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.