உப்பு சப்பில்லாததற்கெல்லாம் அனுமதி கொடுத்த அரசு! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறது வானதி ஸ்ரீனிவாசன் சரமாரி கேள்வி!

Photo of author

By Sakthi

பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை என்பது பாரபட்சமாக இருக்கிறது, என வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டி இருக்கின்றார்.

நவம்பர் மாதம் ஆறாம் தேதி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் தலைமையில், அந்தக் கட்சியினர் யாத்திரையை நடத்த முயற்சி செய்தார்கள்.

ஆனால் அதற்கு முன் தினமே யாத்திரைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டதால், காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

கைது ஆனாலும் யாத்திரையை தடுத்தாலும் அதனை மீறி யாத்திரை நடத்துவோம் என்று முருகன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக யாத்திரை நடைபெற முடியாத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும் அரசு, யாத்திரைக்கு மட்டும் எதற்காக அனுமதி வழங்க மறுக்கிறது என்று அந்த கட்சியினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அந்த வகையில், மற்ற கட்சிகளுக்கு எல்லாம் அனுமதி கொடுத்து விட்டு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் தடை விதிப்பது பாரபட்சமாக இருக்கின்றது என்று பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கின்றார்.அதேபோல சட்டவிரோதமாக யாத்திரை நடப்பதாக கற்பனை செய்யப்படுகின்றது எனவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.