பாஜக யாத்திரையில் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்திருக்கின்றார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன்பாக தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் அவர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் வெற்றிவேல் யாத்திரை மூலமாக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் இதற்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை அது ஒரு துரதிர்ஷ்டவசமானது யாத்திரை சென்ற மாநில தலைவர் உள்பட அனைத்து நிர்வாகிகளையும் கைது செய்திருக்கிறார்கள் காவல்துறையினர்.
தொற்றுக் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தொற்றிலிருந்து மீண்டும் மக்கள் பாதுகாப்பான வாழ்க்கை முறையை அமைத்து வாழ ஆரம்பிக்க உள்ள இந்த நிலையில், அரசியல் தலைவர்களான நாங்களும் மக்களை எவ்வாறு சந்திக்கலாம் என்று பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் யாத்திரை நடத்த திட்டமிட்டோம்.
நாளை தமிழக பாஜகவின் தலைவர் முருகன் அவர்கள் மறுபடியும் யாத்திரையைத் தொடங்க இருக்கின்றார். இந்த யாத்திரைக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்புடன் செல்வதற்கு என்ன கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்தாலும் யாத்திரை தொடர முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும்.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெண்களுக்கு இடையே பிரபலமான ஒருவர் அவர் பெண்கள் மீது பாசம் கருணை கொண்டவர் அதேபோல பிரதமர் மோடி அவர்களும் தமிழக பெண்களுக்கு பாதுகாவலராக பல திட்டங்கள் மூலம் தன்னை நிரூபித்திருக்கிறார்.
அதனை சொல்வதற்காகத்தான், பாஜக கலைப்பிரிவு எம்ஜிஆர் படத்தை உபயோகப் படுத்தி இருப்பார்கள் எம்ஜிஆர் படத்தை உபயோகிப்பதில் தவறில்லை.
காமராஜர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர், ஆனாலும் இன்றும் அவருக்கு மரியாதை கொடுக்கின்றோம் காமராஜர் வழியில் ஆட்சி நடத்த வேண்டும் என்ற கருத்தை பாஜக பல்வேறு இடங்களில் கூறி வருகின்றது.
எளிமையான மற்றும் நேர்மையான வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றை கொடுத்த காமராஜரை உதாரணமாக கூறுகின்றோம் நல்ல தலைவர்களை கொண்டாடுவதில் தவறு இல்லை என்று தெரிவித்தார்.