டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. 24 மணி நேரமும் நடைபெறும் சம்பவங்களை ஒரு மணி நேரமாக காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை கருத்தில் வைத்து 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
இதில் சென்ற 5 பிக் பாஸ் சீசன்களிலும் பங்கேற்ற 14 போட்டியாளர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சிக்கான முதல் விளம்பரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டின் முதல் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுவது தெரியவந்திருக்கிறது.
இதில் வனிதா, அபிராமி, உள்ளிட்டோர் அனிதா சம்பத்தை நாமினேட் செய்திருக்கிறார்கள். அனிதா மிகவும் போலியாக இருக்கிறார் என கூறுகிறார் வனிதா. அனிதா, ஜூலி வனிதாவை நாமினேட் செய்திருக்கிறார், வனிதா அவர் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும் என்பது போல நடந்து கொள்வதாகவும், ஜூலி இன்னும் பாதுகாப்பான வட்டத்திற்குள் வரவில்லை என்றும் தோன்றுகிறது என தன்னுடைய காரணத்தை தெரிவித்திருக்கிறார் அனிதா.
பாலாஜி, முருகதாஸ், சினேகன் மற்றும் வனிதா உள்ளிட்டோரை நாமினேட் செய்திருக்கிறார்.. வனிதா கட்டளையிடுவது போல இருப்பதாக தெரிவித்திருக்கிறார் பாலாஜி, சினேகன், பாலாஜி மற்றும் ஜூலியை நாமினேட் செய்திருக்கிறார்கள் பாலாஜியுடன் சவால் விட முடியாது என்று காரணம் தெரிவித்திருக்கிறார்.
தாடி பாலாஜி சுரேஷ் சக்ரவர்த்தியையும், சுரேஷ் சக்ரவர்த்தி ஜூலியையும், நாமினேட் செய்திருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் எல்லோரும் புதுமுகங்களாக இருப்பார்கள் ஆகவே பார்வையாளர்கள் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு வாரம் இடைவேளை கொடுப்பார் பிக்பாஸ் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனைவரும் பழகிய முகங்கள் தான் அதன் காரணமாக, நிகழ்ச்சி ஆரம்பித்த அடுத்த நாளே எலிமினேஷன் வேலையை தொடங்கிவிட்டார் பிக்பாஸ் என்று சொல்லப்படுகிற.து இவர்களில் யார் இந்த வாரம் வெளியேற போகிறார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்.