நடிகை வனிதா விஜயகுமார் சினிமா உலகத்தில் இருந்து காணாமல் போனாலும் தற்சமயம் மறுபடியும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தொடர்ச்சியாக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மற்றும் படங்கள் என்று கமிட்டாகி மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தனியாக யூடியூப் பக்கம் ஒன்றையும் அவர் நிர்வகித்து வருகிறார், ஒரு துணி கடையும் சமீபத்தில் அவர் திறந்திருக்கிறார்.
இப்படி பிசியாக இருந்து வரும் வனிதா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருக்கிறார், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிவிட்டது.
இந்த சமயத்தில் நடிகர் விஜய் தொடர்பாக ஒரு பேட்டி வழங்கி இருக்கிறார் நடிகை வனிதா, அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, அன்று நான் நடிகர் விஜயை அணுகிய முறைக்கும் இன்று அவர் இருக்கும் உயரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் அன்று நான் எவ்வாறு பேசி பழகினேனோ அப்படியே இன்றும் என்னால் பேசமுடியும் என்று தெரிவித்திருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார்.