TVK BJP: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததுடன், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து ஆறுதல் கூறினார்.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், தலைமறைவாக இருந்த மதியழகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சிபிஐ வசம் ஒப்படைக்கபட்டுள்ளது. இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இதற்கு காரணமான விஜய் மீது ஏன் இன்னும் வழக்கு பதியப்படவில்லை என்ற கேள்வியை பலரும் முன்வைத்து வரும் சூழலில், இதனை ஆராயும் போது பாஜக-விஜய் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஆனால் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியதால் கூட்டணிக்கு மறுப்பு தெரிவிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது கரூர் வழக்கு மத்திய அரசிடம் உள்ளதால், விஜய் கூட்டணி வரவில்லையென்றால் விஜய் மீது வழக்கு பதியப்படும் என்று பாஜக விஜய்யிடம் கூறி வருவதாக பேசப்படுகிறது. இதனால் தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ளவும், எதிர்கால அரசியலில் பிரகாசிக்கவும் விஜய் பாஜக கூட்டணியில் சேர வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

