State

கூட்டத்தில் புகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்…! எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு…!

திருமாவளவனின் பெண்களுக்கு எதிரான பேச்சை கற்பனை செய்து இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஆகிய அமைப்புகள் பொய்யாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

என்று தெரிவித்து தர்மபுரியில் அந்தக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது பாரதிய ஜனதா கட்சியினருக்கு எதிராக கோஷங்கள் எழுந்தன இதற்கிடையில் தர்மபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் போராட்டத்தின் போது எதிராக கோஷமிட்டனர் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த 15 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தகவலை அறிந்த அக்கட்சியின் சார்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment