தேர்தலுக்கு முன் இதை செய்தால் வெற்றி நிச்சயம்! எத்தனை விஜய் வந்தாலும் தடுக்க முடியாது! விசிக தலைவர் பேட்டி!

Photo of author

By Sakthi

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திமுக கட்சி தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளை மூடினால் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் எத்தனை விஜய் வந்தாலும் திமுக வெற்றியை தடுக்க முடியாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் உள்ள நிலையில் திமுக, அதிமுக முதலான கட்சிகள் இப்பொழுது இருந்தே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஆளும் திமுக அரசு மக்களுக்கு நலத்திட்டங்களை செய்து வர எதிர்கட்சியான அதிமுக கட்சியானது ஆளும் கட்சியின் குறைகளை சுட்டிக் காட்டி வருகின்றது. தேசிய கட்சியான பாஜக தமிழகத்தில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. நாம் தமிழர் கட்சி, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன.

இவர்களுக்கு மத்தியில் நடிகர் விஜய் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். நடிகர் விஜய் அவர்களும் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் குறிக்கோள் என்று கூறி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்து பணிகளையும் செய்து வருகின்றார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் திமுக கட்சி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சிறிய ஐடியா கொடுத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் அதிமுக கட்சிக்கு இந்த அறிவுரையை கூறியிருக்கிறார்.

அந்த கட்சி நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் “தமிழகத்தில் முதுக் கடைகளை மூட வேண்டும் என்ற நம்பிக்கையில் நாம் களத்தில் நிற்க வேண்டும். அந்த நம்பிக்கை தான் நமக்கு முக்கியம். இந்த போராட்டம் மற்ற வேலைகள் அனைத்தும் தேர்தலுக்காக செய்கின்றோம் என்று அனைவரும் கூறி வருகின்றனர். அதை பற்றி நாம் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை.

திமுக கூட்டணியில் இருக்கும் விசிக கட்சி திமுகவை நேரடியாக செல்வதற்கு பயன்படுகின்றது. அதனால் தான் தேசிய கொள்கை என்ற பெயரை கூறுகின்றது என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர். நாங்கள் செல்வதை புரிந்து கொள்ள ஞானம், சக்தி அனைத்தும் தேவை.

தமிழகத்தில் மதுக்கடைகளை கட்டாயமாக மூட வேண்டும். இதை நாங்கள் சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. இதை நாங்கள் அரசிடம் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றோம்.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் இருந்து கொண்டே நாங்கள் திமுகவை கேள்வி கேட்கின்றோம். ஆனால் மற்றவர்கள் யாரும் திமுகவை எதிர்க்க பயப்படுகிறார்கள். திமூக கூட்டணியில் இருந்து கொண்டு கேள்வி கேட்டாலும் தவறாக பேசுகிறார்கள். கேள்வி கேட்கவில்லை என்றாலும் தவறாக பேசுகிறார்கள். என்னதான் செய்வது என்று தெரியவில்லை.

இவ்வாறு குறை சொல்பவர்களின் நோக்கம் திமுக கூட்டணியை கலைத்துவிட்டு திமுக கட்சியை பலவீனப்படுத்தி வேண்டும் என்பது தான். திமுக கட்சியின் கூட்டணியில் இருந்து கொண்டே திமுக கட்சியை கேள்வி கேட்பதற்கு ஒரு கெத்து வேண்டும். அது எங்களிடம் இருக்கின்றது.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக கட்சி அனைத்து மதுக்கடைகளையும் கட்டாயமாக மூட வேண்டும். இவ்வாறு மூடிவிட்டால் எத்தனை விஜய் வந்தாலும் திமுக கட்சியை ஒன்றும் செய்ய முடியாது. திமுக கட்சிதான் வெற்றி பெறும்.

தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடுவதால் விசிக கட்சிக்கு என்ன பலன் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள். மதுக்கடைகளை தமிழக அரசு முற்றிலூமாக மூடுவதே எங்களுக்கு கிடைக்கும் வெற்றியாகும்.

திமுக கட்சியையும் சரி முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் சரி விமர்சிக்க விசிக கட்சிக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை. இந்த போராட்டத்தால் கூட்டணிக்குள் பிளவு வந்தாலும் சரி. நாங்கள் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பின் வாங்கப் போது இல்லை. இந்த போராட்டம் மூலமாக எந்த பிரச்சனை வந்தாலும் நாங்கள் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பாக மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியான காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அதிமுக மற்றும் தவெக(தமிழக வெற்றிக் கழகம்) மற்றும் பல கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விசிக நடத்தும் இந்த மாநாட்டுக்கு பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல் முருகன் வரவேற்பு அளித்துள்ளார்.