ADMK-VCK:அதிமுக தன்னுடன் கூட்டணி வைக்க நெருக்கடியை தருகிறது பாஜக விசிக திருமாவளவன் கருத்து.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தின் முதலமைச்சர் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அதன் பிறகு அதிமுக OPS அணி EPS அணி இரண்டாக உடைந்தது. மேலும் சசிகலா, TTV தினகரன் என அதிமுகவில் இருந்து பிரிந்து புதிய கட்சிகளை ஆரம்பித்தார்கள். இந்த நிலையில்தான் O.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைய பாஜக உறுதுணையாக இருந்தது.
அதன் பிறகு அதிமுகவிற்கு எடப்படியார் தலைமை வகித்தார். எனவே அதிமுக கூட்டணி அமைத்து பாஜக தமிழகத்தில் தேர்தல்களை சந்தித்தது. இந்த நிலையில் திமுக அதிமுகவை தவிர்த்து தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி அமைக்க என்றும் என்பதில் பாஜக உறுதியாக இருந்தது அதன் அடிப்படையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது.
இருப்பினும் பாஜக சில தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி தேர்தலில் திமுக வற்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தை பிடித்தது பாஜக. மேலும் அதிமுக தொடர் தோல்வியால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டிய சுழல் நிலவி வருகிறது.மேலும் பாஜக மக்களவை தேர்தலை போல் தமிழக சட்டமன்றத்தில் தனி கூட்டணி அமைத்து போட்டி போட முடியாது என்பதை அறிந்து இருக்கிறது.
இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணி குறித்து தெளிவான என வித முடிவும் எடுக்க வில்லை. எந்த நிலையில் தான் ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் அதிமுகவை தனிமைப்படுத்தினால் அவர்கள் வேறு வழி இன்றை பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற நெருக்கடியை பாஜக அதிமுகவிற்கு கொடுக்கிறது என தெரிவித்து இருந்தார். மேலும் வருகின்ற தேர்தலில் அதிமுக தனித்து அல்லது கூட்டணி வைக்கப் போகிறதா என்ற சவாலை சந்தித்து உள்ளது என்றார்.