இந்த செடி மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் போதும் நினைத்த காரியம் நடக்கும்..!!

Photo of author

By Priya

Vellerukku palangal: நமது முன்னோர்கள் சிலவகையான செடிகளை மருத்துவம் சார்ந்தும், ஆன்மீக ரீதியாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பொதுவாக நாம் பயன்படுத்தும் எல்லா செடிகளும் மருத்துவ பயன்களை கொண்டதாக தான் இருக்கும். அதனை நாம் என்றைக்கும் மறக்க கூடாது என்பதற்காக தான் மருத்துவக்குணங்கள் கொண்ட செடிகளை நாம் பண்டிகை நேரத்தில் விழாக்களில் பயன்படுத்தி வந்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் இதனை பலரும் ஆன்மீக செடிகள் என்று பார்ப்பதால் இதன் மருத்துவ பயன்கள் பற்றி நாம் அறிந்துக்கொள்ளாமல் போய்விடுகிறோம். ஆனால் ஒரு சில செடிகளை ஆன்மீக ரீதியாக பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் நமது முன்னோர்கள் குறித்து வைத்துள்ளனர். அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளை எருக்கன் செடி வேர்

வெள்ளை எருக்கன் செடி விநாயகருக்கு உகந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொதுவாக பால் வடியும் எந்த ஒரு செடியும் வாஸ்து ரீதியாக நாம் வீடுகளில் வளர்க்க மாட்டோம். ஆனால் இந்த வெள்ளை எருக்கன் செடியை வீட்டின் முன்புறம் வாசல் பகுதியில் வளர்க்கலாம்.

வெள்ளை எருக்கன் செடி பல மருத்துவ பயன்களை (erukku plant medicinal uses)
கொண்டது. காயம் முதல் வலி வரை அனைத்திற்கும் மருத்துவ முறைகளை பின்பற்றி வளர்த்து வந்தார்கள். அந்த வகையில் இந்த செடி விநாயகருக்கு உகந்ததாக பார்க்கப்படுவதால் இதன் வேர் பல ஆன்மீக பலன்களை கொண்டுள்ளது.

இந்த எருக்கன் செடியின் வேர் எடுத்து வந்து அதனை பூஜை அறையில் வைத்து செவ்வாய், வெள்ளி தூபம் போட்டு வர நம் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகி, வீட்டில் நிம்மதி தங்கும் என்பது ஐதீகம்.

மேலும் தினமும் விளக்கேற்றி வைத்து வழிபட்டு நாம் நினைத்த காரியம் நடக்க வேண்டும் என வேண்டினால், காரியங்களை பொறுத்து நடக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் தொழிலில் நஷ்டத்தை மட்டும் சந்திப்பவர்கள் இந்த எருக்கன் செடி வேர் எடுத்து அதனை சந்தனம், குங்கும் வைத்து தொழில் செய்யும் இடங்களில் வைத்து வழிபட கண்திருஷ்டி, தொழிலில் லாபம் பெறலாம்.

குறிப்பு வீட்டில் வெள்ளை எருக்கு செடி வளர்ப்பவர்கள் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் மருத்துவ குணம் கொண்ட எருக்கன் செடியாக இருந்தாலும், மருத்துவ முறைகளை பின்பற்றி தான் மருந்து உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: Poovarasu Maram: உங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மரம் உள்ளதா? கட்டாயம் இதை பாருங்க..!