குறையாத காவாலா பாடல் வைப்….ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல்…

Photo of author

By Sakthi

 

குறையாத காவாலா பாடல் வைப்….ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல்…

 

ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் காவாலா பாட்டுக்கு ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடி பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகின்றது.

 

இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா நடனம் ஆடிய காவாலா பாடல் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலாக கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி வெளியானது. ஜூலை மாதம் ஆறாம் தேதி வெளியானதில் இருந்து தற்பொழுது வரை இணையத்தில் பல சாதனைகளை இந்த காவாலா பாடல் படைத்து வருகின்றது.

 

காவாலா பாடலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடனம் ஆடி வீடியோ அப்லோடு செய்து வைரல் ஆகி வருகின்றனர். இந்நிலையில் காவாலா பாடலுக்கு ஜப்பான் நாட்டின் தூதர் நடனம் ஆடி வீடியோ அப்லோடு செய்துள்ளார்.

 

ஜப்பான் நாட்டுடைய இந்தியாவின் தூதர் ஹிரோஷி சுசுகி அவர்கள் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவை அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி அவர்கள் அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் செய்வது போல ஸ்டைல் செய்துள்ளார். மேலும் ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி அவர்கள் வெளியிட்டுள்ள அந்த பதிவில் “நடிகர் ரஜினிகாந்த் மீதான என்னுடைய அன்பு தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.