ஆளுநர் நடத்திய மாநாடு!.. ஒட்டு மொத்தமாக புறக்கணித்த துணைவேந்தர்கள்!…

பாஜக அரசு இல்லாத மாநிலங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாத்தங்களை கொண்ட நபர்களை ஆளுநராக நியமித்து மாநில அரசுக்கு குடைச்சல் கொடுப்பதுதான் பாஜகவின் ஸ்டைல். இதை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். தமிழகத்திற்கும் ஆர்.என்.ரவியை ஆளுநராக கொண்டு வந்தனர். தமிழக அரசு சட்டபையில் நிறைவேற்றும் எந்த மசோதக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தப்படிப்பது ரவியின் ஸ்டைல்.

பல விஷயங்களிலும் தொடர்ந்து தமிழக அரசோடு மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். குறிப்பாக, பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டுமென தமிழக அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு முன்னும் பின்னரும் கூட நிறைய மசோதக்கள் அனுப்பப்பட்டது. ஆனால், எதற்குமே அவர் ஒப்புதல் கொடுக்கவில்லை.

எனவே, உச்சநீதிமன்றத்தை நாடியது திமுக அரசு. அதைத்தொடர்ந்து ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் தமிழக அரசு கொண்டு வந்த எல்லா மசோதக்களுக்கும் ஒப்புதல் அளித்தது. எனவே, துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான எல்லா விஷயங்களும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால், ஊட்டியில் துணை வேந்தர் மாநாட்டை நடத்துவதாக ஆளுனர் அலுவகம் அறிவித்தது. அதன்படி இன்று உதகையில் மாநாடு துவங்கியுள்ளது. ஆனால், பல துணை வேந்தர்கள் இதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இது ஆளுநர் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தை கூட்டி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.