வீடியோ கேம் தான் முக்கியம்! மாணவன் செய்த செயலால் மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி!
எப்படி இது கூட தெரியாமல் அவ்வளவு மும்முரமாக கேம் விளையாட இணையங்கள் பிள்ளைகளை இழுக்கின்றது. சிறு பிள்ளைகள் அனைவருமே கிட்டத்தட்ட அப்படி தான் உள்ளனர். அதிலும் சிலர் சாப்பாடு கூட இல்லாமல், விளையாட விட்டால் பொதும் என்று தான் நினைக்கிறார்கள்.
கிட்டத்தட்ட பதின் பருவ சிறார்கள் அனைவருமே மொபைல் போனை கையிலேயே வைத்து திரியும் அளவுக்கு அது குழந்தைகளை வசிய படுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் சிலர் நல்லதும் தெரிந்து கொள்கிறார்கள், சிலர் இணையத்தின் மூலம் கெட்டு வீணாகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையை சேர்ந்தவர் சங்கபாலன். இவர் எம்.குன்னத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் அந்த பகுதி பசங்களுடன் இணைந்து அங்கே ஒரு கோவிலில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து கைபேசியில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது ஒரு நீர்விரியன் பாம்பு அங்கு இருந்த மணிகண்டனின் இடது பாதத்தில் கடித்து உள்ளது. அதன் காரணமாக ஏதோ வலிக்கிறது என பார்த்த மணிகண்டன் பாம்பு கடித்துள்ளது தெரிந்து உடனே அந்த பாம்பை பிடித்துக்கொண்டு தனது உறவினர் வண்டியில் உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனைக்கு விரைந்து உள்ளனர்.
கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்தது அங்கு இருந்த அனைவரையும் சிறிது நேரம் பரபரப்புக்கு உள்ளாக்கியது. அதன் பின்னர் சிறுவனுக்கு தேவையான முதலுதவி செய்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விஷயம் அந்த பகுதியில் உள்ள மக்களை பெரும் அதிர்சிக்குள்ளாக்கியது.