இன்று நடைபெறுகிறது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம்! மிகவும் பிரம்மாண்டமான ஏற்பாடு!

Photo of author

By Sakthi

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன், திருமணம் இன்னும் சற்று நேரத்தில் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆரம்பிக்கயிருக்கிறது.

திருமணம் நடைபெறும் கடற்கரை விடுதியில் முன்புறம், கடற்கரை பகுதி, என்று அனைத்து பகுதிகளிலும் பவுன்சர்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திருமண விழாவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தனியார் காவலர்கள் 80க்கும் மேற்பட்டோர் அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள்.

மண்டபத்திற்கு உட்புற மட்டுமல்லாமல் மண்டபத்திற்கு பின்புறமும் கடற்கரை வழியாக யாரும் உள்ளே நுழைய கூடாது என்பதற்காகவும், புகைப்படம் எடுத்து விடக்கூடாது என்பதற்காகவும், அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

அதோடு மண்டபத்திலும் விருந்தினர்கள் யாரும் புகைப்படம் எடுத்து விடாமல் இருப்பதற்காக பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை தனியார் இணையதள சேனல் ஒன்று நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இதன் காரணமாக தான் விருந்தினர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

அதோடு மட்டுமல்லாமல் திருமண புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் அதற்கு முன்பாக புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகிவிட கூடாது என்பதிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உறுதியாக இருக்கிறார்கள்.

திருமணத்தில் அனைத்து விஷயத்தையும் பார்த்து, பார்த்து, வித்தியாசமான முறையில் ஏற்பாடுகளை செய்திருக்கிறது இந்த காதல் ஜோடி. தண்ணீர் பாட்டிலில் தொடங்கி செட் ,சாப்பாடு, என பிரம்மாண்டத்தின் உச்சமாக இன்றைய தினம் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் நடைபெறவுள்ளது.