Vignesh Sivan: மரியாதை நிமித்தமாக தான் புதுவை அமைச்சரை சந்தித்தேன் விக்னேஷ் சிவன் விளக்கம்.
தமிழக முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் விக்னேஷ் சிவன் “போடா போடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் நடிகை நயன்தாராவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் திரைப்பட காட்சிகளை பயன் படுத்துவதில் நடிகர் தனுஷ் உடன் முரண்பாடு ஏற்பட்டு இருந்தது.
இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து இருந்தது. இந்த பிரச்சனை முடிவதற்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்பான ஒரு செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, புதுவை மாநில அரசுக்கு சொந்தமான ஹோட்டல் விலைக்கு வாங்க அம் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் பேரம் பேசி இருக்கிறார் என்பது ஆகும்.
இது குறித்து தனது சமூக வலை தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Company) பட பிடிப்பிற்காக புதுச்சேரி விமான நிலையத்தை பார்க்க சென்றதாகவும், அப்போது மரியாதை நிமித்தமாக புதுவை முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன்.
அப்போது என்னுடன் வந்த மேலாளர் புதுவையில் ஹோட்டல் ஒன்று வாங்குவது தொடர்பாக பேசினார் அந்த செய்திதான் தற்போது நான் ஹோட்டல் வாங்குவது போன்று மருவி இருக்கிறது. மேலும், இது தொடர்பான வெளியான மீம்ஸ்கள் வேடிக்கையாக இருக்கிறது. அதேநேரம் தேவையற்றதாக இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.